மத்தியபிரதேசம்: ம.பி. அரசுப் பள்ளி வகுப்பறையில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரையால் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, போபாலில் உள்ள பி.எம். ஸ்ரீ (மத்திய அரசு திட்ட) பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. மாணவர் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளியின் பாழடைந்த நிலை குறித்து ஏற்கனவே அரசிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையில் எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டியதால் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.