இலகுரக மோட்டார் வாகனம் (LMV) ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் வணிக வாகனங்களை ஓட்டலாம் என்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது 2017-ல் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்துவதாகும். ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து காப்பீட்டு நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன.
லாரி, பஸ், ரோடு ரோலர் போன்ற வணிக வாகனங்களை எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் ஓட்டுவது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சுமையை அதிகப்படுத்துவதாகவும் அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இந்நிலையில், எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், 7,500 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக வாகனங்களை ஓட்டலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு சாலை விபத்துகளில் 17 லட்சம் பேர் உயிரிழந்தனர். சாலைப் பாதுகாப்பை மிக முக்கியமான பிரச்சினையாக மாற்றியது. ஆனால், இலகுரக வாகனங்களின் உரிமம் பெற்றவர்கள் வணிக வாகனங்களை ஓட்டுவது விபத்துக்குக் காரணம் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், 7,500 கிலோவுக்கு மேல் எடையுள்ள வணிக வாகனங்களை ஓட்ட விரும்புபவர்கள் பல்வேறு சான்றுகளை பரிசீலிக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது. இதன் மூலம், 2017ல் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஓட்டுனர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இதை பரிசீலித்த நீதிபதிகள், சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.