புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, பா.ஜ.க., அரசு பொறுப்பேற்க வேண்டும். அங்குள்ள மக்களை, மதம் கேட்டு, பயங்கரவாதிகள் கொன்று விட்டதாக, பா.ஜ.க., கூறுகிறது. பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா?” மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேடிவார் விமர்சித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியது குறித்து பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, சித்தராமையாவை போருக்கு எதிரான குரல் என்று குறிப்பிட்டு பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், மற்றொரு மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேடிவார், “பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

அங்குள்ள மக்களை மதம் கேட்டு பயங்கரவாதிகள் கொன்றதாக பாஜக கூறுகிறது, பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா? சிலர் இது நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். தீவிரவாதிகளுக்கு ஜாதி, மதம் கிடையாது. தவறு செய்தவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்திய மக்களின் ஒருமித்த குரல். இதை பாஜக முதலில் செய்ய வேண்டும், ஆனால் பாஜக அரசு பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தப் பேசுகிறது.
இதைச் செய்ய 20 ஆண்டுகள் ஆகும். ‘பாகிஸ்தான் ஆதரவாளர்கள்’ – முன்னதாக, சித்தராமையாவின் கருத்துகள் பாஜகவின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பாஜக எம்பி சம்பித் பத்ரா, “காங்கிரஸ் பாகிஸ்தான் மொழியில் பேசுகிறது. சித்தராமையா உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சி வெளியேற்ற வேண்டும்.. ஆனால், காங்கிரஸின் உண்மையான முகம் இதுதான்… அதை செய்ய மாட்டார்கள்… சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கான ஆதாரம் வேண்டும் என்று ராகுல் காந்தி கோரினார். இன்று சித்தராமையாவின் கருத்துகள் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. பாகிஸ்தான் அவர்களை தனது ஆதரவாளர்களாக கருதுகிறது” என்றார்.