உத்தரபிரதேசம்: மகா கும்பமேளாவில் குளித்த பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து ஒரு கும்பல் டெலிகிராமில் அரங்கேறிய கொடூரம் நடந்துள்ளது.
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பெண்களை, அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்த மர்ம கும்பல், அதனை டெலிகிராம் குரூப்பில் விற்பனை செய்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பெண்களின் மாண்பை காக்க, பாஜக அரசு தவறிவிட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த மகா கும்பமேளாவில் இதுவரை கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடியுள்ளனர்.
ஆன்மீக நிகழ்வாக பார்க்கப்படும் இந்த புனித நீராடலை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த மர்ம கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.