டெல்லி: இந்தியாவில் 1881 முதல் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இருப்பினும், 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் முதல் செப்டம்பர் 2020 வரை நடைபெற இருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அது தொடங்கப்படவில்லை. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ரூ.12,000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். சட்டம் அமலுக்கு வந்த பின் எடுக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என அமலுக்கு வந்துள்ளது.
புதிய தரவுகள் இல்லாத நிலையில், அனைத்து அரசு திட்டங்களும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.