புதுடில்லி: தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி திட்டத்தை மத்திய அரசு பாராட்டியுள்ளது.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார நிதி அறிக்கை தாக்கல் செய்தார். இதில் ‘பொதுக்கல்வியில் புதுமை’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பாராட்டு கிடைத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வி திட்டம் உதவியாக இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
இந்த திட்டத்தின் வாயிலாக கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.