புதுடெல்லி: முழு அளவிலான போருக்கு வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நிபுணர்கள் இல்லை என தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் உடன் முழு அளவிலான போருக்கு வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு முழுமையான போரை நோக்கி செல்லும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை. ஆனால், பாகிஸ்தான் வாலாட்டுவதை நிறுத்தாவிட்டால் அந்த கடின முடிவை இந்தியா எடுக்கும் என்கின்றனர்.
பலுசிஸ்தான் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகளை பாக்., சந்தித்து வரும் நிலையில், மத்தியஸ்தம் பேசுவதற்கு அது அமெரிக்காவை எதிர்பார்த்துள்ளது என்கிறார்கள்.
இந்தியாவை சமாளிக்கும் அளவிற்கு பாகிஸ்தானிடம் போதிய ஆயுதங்கள் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.