திருப்பதி: ஜி.எஸ்.டி வரி குறைப்பால் பக்தர்களுக்கு ரூ.2 கோடி மிச்சம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் காரணமாக திருப்பதி கோயிலில் ஆயிரம் ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரையிலான வாடகை கொண்ட அறைகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு வரி குறைந்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
50 ரூபாய் முதல் 999 ரூபாய் வரை ஏற்கனவே வரி விதிக்கப்படாத நிலையில், அதற்கு மேல் உள்ள அறைகளுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு மாதம் 2 கோடி ரூபாய் வரை செலவு குறையும் என தேவஸ்தானம் கூறியுள்ளது.
இத்தகவல் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு பல்வேறு வகையிலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.