புது டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. எந்த நேரத்திலும் போர் தொடங்கலாம் என்ற சூழலில், இந்திய விமானப்படை இன்று முதல் 2 நாட்களுக்கு பாகிஸ்தான் எல்லையில் ஒரு பெரிய போர் பயிற்சியை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல், Su-30, MKI, MiG 29, Mirage 2000, தேஜாஸ், AWACS, ஜாகுவார் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து முன்னணி போர் விமானங்களும் இதில் ஈடுபடும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வழக்கமாக நடைபெறும் முக்கிய விமான போர் பயிற்சிக்காக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் போது, தரையிலும் வான்வெளியிலும் எதிரி இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்க பயிற்சி அளிக்கப்படும்.