கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 171 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த கேரளாவை சேர்ந்த டேவிஸ் (35), அமெரிக்காவை சேர்ந்த கசன் எலியா (32) ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விமானப் பணிப்பெண்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றபோதும், இருவரும் தொடர்ந்து தாக்கி வெடிகுண்டு வீசி மிரட்டியதாக கூறப்படுகிறது. விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

விமானம் சென்னை வந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இருவரையும் சோதனையிட்டனர். ஆனால், அவர்களிடம் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இதையடுத்து, இரு பயணிகளும் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.