புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தெலுங்கு தேசம் கட்சியின் பி.கே.பார்த்தசாரதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதிலளித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் 48 இந்திய வம்சாவளி மாணவர்கள் அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், இதற்கான காரணத்தை அமெரிக்க அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசிடம் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது மத்திய அரசு.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவும், சட்ட ரீதியாகவும் குடியேற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.