புதுடில்லி: இரண்டு கட்டங்களாக நடத்த பரிசீலனை… நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தததால் தேர்வை 2 கட்டங்களாக நடத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததன் எதிரொலியாக, வரும் காலங்களில் JEE தேர்வுகளைப் போலவே நீட் தேர்வையும் 2 கட்டங்களாக நடத்த மத்திய அரசு பரிசீலித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நீட் தேர்வை நடத்திவரும் தேசிய தேர்வு முகமை மூலம் முதல்கட்டத் தேர்வை நடத்தவும், , தேசிய தேர்வு வாரியம், CBSE, AIIMS ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு அமைப்பின் மூலம் இரண்டாம் கட்ட தேர்வை நடத்தவும் பரிசீலித்துவருவதாக கூறப்படுகிறது.
முதல் கட்ட தேர்வை எழுத்துப் பூர்வமாகவும், இரண்டாம் கட்ட தேர்வை கணிணி வாயிலாகவும் நடத்த உயர் மட்ட அளவில் ஆலோசனை நடந்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.