வாழைப்பழத்தில் ஏராளமான அளவில் வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி உள்ளது. இவை அனைத்தும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க உதவுவதோடு, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். மேலும் வாழைப்பழம் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசரும் கூட. இத்தகைய வாழைப்பழத்தில் நன்கு கனிந்ததை கையால் நன்கு பிசைந்து, அதை பாதங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை, இரவு தூங்கும் முன் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
தேன் மிகச்சிறந்த ஆன்டி-செப்டிக் பொருளாக கருதப்படுகிறது. எனவே இது குதிகால் வெடிப்பை சரிசெய்வதில் சிறந்தது. இத்தகைய தேனை ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு பாதங்களை சுத்தமாக கழுவிவிட்டு, தேன் கலந்த நீரில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து எடுக்க வேண்டும். பிறகு பாதங்களை நன்கு உலர்த்திவிட்டு, பாதங்களுக்கு மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
வெஜிடேபிள் ஆயில் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்படும். மேலும் வெஜிடேபிள் ஆயிலில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன. இத தவிர இந்த எண்ணெய் பாதங்களில் புதிய செல்களை உருவாக்கி குதிகால் வெடிப்பைப் போக்கும். அப்படிப்பட்ட வெஜிடேபிள் ஆயிலை இரவு தூங்கும் முன் சுத்தம் செய்த பாதங்களில் தடவி, கால்களில் சாக்ஸை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு மாயமாய் மறைந்துவிடும்.
அசிட்டிக் பண்புகள் நிறைந்த எலுமிச்சையுடன் ஈரப்பமூட்டும் விளைவு கொண்ட வேஸ்லினை சேர்த்து கலந்து, அதிகம் வறட்சியடைந்த சருமம் மற்றும் குதிகால் வெடிப்பில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு 1 டீஸ்பூன் வேஸ்லினுடன் 4-5 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு உலர்த்த வேண்டும். பின்னர் அந்த வேஸ்லின் கலவையை பாதங்களில் தடவி, சாக்ஸை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் சில நாட்கள் தொடர்ந்து செய்ய, குதிகால் வெடிப்பு ஓரிரு நாட்களில் காணாமல் போகும்.
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் வினிகரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களில் அந்த பேஸ்ட்டை தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய குதிகால் வெடிப்பு நீங்கிவிடும்.