மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலை மேம்படுத்துவதுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் பாலுடன் சேர்க்கப்படும் சில இயற்கை பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவுகளில் ஒன்று பசும்பால். பாலில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், சில இயற்கை பொருட்களை சேர்த்து குழந்தைகளுக்கு தருவதால், அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். தினமும் உலர் பழங்கள் மற்றும் காய்கறிகளை பாலுடன் கலக்கும்போது, குழந்தைகள் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்க முடியும்.

பேரீச்சம்பழம் பாலுடன் சேர்க்கும்போது, புரதம், வைட்டமின் பி16 மற்றும் இரும்புச்சத்து நிறைந்ததால் எலும்புகள் வலுப்படும், செரிமானம் மேம்படும், இரத்த சோகை குறையும். இரவு முழுவதும் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை காலையில் பாலில் கலந்து கொடுப்பது சுவையை மட்டும் அல்ல, ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் மேம்படுத்துகிறது. இதேபோல், உலர் திராட்சையும் நினைவாற்றலை மேம்படுத்துவதுடன், மூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகள் இதன் இயற்கையான இனிப்பை விரும்பி குடிப்பார்கள்.
நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த அத்திப்பழங்கள், செரிமானத்திற்கு உதவுவதோடு, உடல் சக்தியையும் உருவாக்குகின்றன. சர்க்கரை சேர்க்காமல் பாலில் இதை கலந்து கொடுப்பதால், குழந்தைகள் ஆர்வமாக பருகுவர். குழந்தைகளுக்கு பிடித்த பாதாமில் புரதம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. பாதாம் மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் பயனுள்ளதாக உள்ளது.
கேரட்டை அரைத்து பாலில் சேர்த்தால், கண்கள், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, உடல் வளர்ச்சிக்கும் உதவும். இந்தச் சிறிய மாற்றங்களால், குழந்தைகள் தினசரி சத்தான உணவுகளை ரசித்து உண்ணும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். பாலுடன் சேர்க்கப்படும் இயற்கை பொருட்கள் குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் நினைவாற்றல் மேம்பாட்டுக்கும் ஒரு சிறந்த வழியாக இருக்கின்றன.