நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை பல வகையான சத்துகளை உடல் அளிக்கும். பாதாம், இதர ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் முக்கியமான ஒன்று ஆகும்.
பாதாம் ஆற்றல், புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை கொண்டுள்ளது. இது உலகெங்கும் பல வீடுகளில் முக்கிய இடம் பெறுகிறது. சரியான அளவில் பாதாம் சாப்பிடுவதன் மூலம் உடல் பல நன்மைகளை பெறலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும்?
ஒரு கையளவு (7-8) பாதாம் தினசரி சாப்பிட போதுமானது. இது உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். அதை நீங்கள் பச்சையாகவும், தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்து அல்லது வறுத்து சாப்பிடலாம். 28 கிராம் பாதாம் உட்கொள்ளும்போது 160 கலோரிகள், 6 கிராம் புரதம், 14 கிராம் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் 3.5 கிராம் நார்ச்சத்து போன்றவை கிடைக்கும்.
பாதாம் சாப்பிடுவதை யார் தவிர்க்க வேண்டும்?
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், விளையாட்டு வீரர்கள், நீரிழிவு அல்லது இதய பிரச்சனைகள் உள்ளவர்கள் பாதாம் நன்மைகள் பெறலாம். ஆனால் ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக கலோரிகளை குறைப்பவரும் இதனை தவிர்க்க வேண்டும்.
பாதாமை எப்போது சாப்பிட வேண்டும்?
பாதாம் காலை உணவாக அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடலாம். இது நீண்ட நேரம் ஆற்றலை வழங்க உதவும். இரவில் பாதாம் சாப்பிடுவது, அதன் மக்னீசியம் உள்ளடக்கம் காரணமாக, நல்ல தூக்கத்திற்கு உதவும்.