சென்னை: உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு நல்ல அருமருந்து குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தண்டுக் கீரை – ஒரு கைப்பிடி
மிளகு – 10
மஞ்சள் தூள் – சிறிதளவு
செய்முறை: முதலில் தண்டுக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். மிளகைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஐந்து டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் தண்டுக் கீரை, மிளகு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். கீரையுடன் நன்கு கொதிக்க வைத்து அதனை பாதியளவாகச் சுண்டவைத்து இறக்கி வடிகட்டிக் குடிக்கவும்.
பயன்கள்: உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்தாக செயல்படும் தண்டுக் கீரை மிளகு கசாயம். இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும். இதனால் உடலில் கெட்டக்கொழுப்புகள் சேராத வகையில் உதவும்.