காலை உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக கொய்யா பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை குறைக்கிறது.
ஆனால் கொய்யாவை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிலருக்கு வயிறு உபாதையை உண்டாக்கும். கொய்யாவில் உள்ள விதைகள் செரிக்க நேரம் எடுக்கும் என்பதால், சளியால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் கொய்யாவை தவிர்க்க வேண்டும்.
சளி, இருமல் அதிகரிக்கும் என்பதால் இரவில் சாப்பிடக் கூடாது. கொய்யா எடை குறைக்க உதவுகிறது. இதில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
கொய்யா தோல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. காலை உணவுக்குப் பிறகு மற்றும் மதிய உணவுக்கு முன் கொய்யா சாப்பிடுவதற்கு சிறந்த நேரம். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்