வாழைப்பழம் குளிர்ச்சியான உணவாகக் கருதப்படுகிறது. இதனில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலை குளிர்விக்க செய்கின்றன. இது ஏற்கனவே செரிமானத்தை மெதுவாக்கும் பழமாக செயல்படுகிறது. அதன் காரணமாக, வாழைப்பழம் சாப்பிட்டவுடன் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது செரிமான செயல்முறையை மேலும் சீர்கேடாக்கும் அபாயத்தை உருவாக்கும்.

இது வாயு, வீக்கம், அஜீரணம், தொண்டை புண் போன்ற சிக்கல்களை உண்டாக்கலாம். குறிப்பாக நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், ஜீரணிக்க தாமதம் ஏற்படுகிறது. அதனுடன் குளிர்ந்த நீர் கலந்து சென்றால், வயிற்றில் உள்ள எண்டைம்களின் வேலை தடைபடலாம். இதனால் முழுமையான செரிமானம் சாத்தியமில்லை, சில நேரங்களில் தொந்தரவு அளிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
மருத்துவ ரீதியாக நேரடியாக ஆபத்து இல்லை என்றாலும், உணர்திறன் கொண்ட செரிமான அமைப்புள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் சளி, இருமல் போன்ற பிரச்சனையுடன் இருக்கிறவர்கள் ஒருபோதும் இதனைத் தவிர்க்க வேண்டும். தாகமாக இருந்தால் வெதுவெதுப்பான நீர் குடிப்பது சிறந்த தேர்வாகும்.
வாழைப்பழம் ஒரு உயர்நிலை ஊட்டச்சத்து நிறைந்த பழம் என்பதில் சந்தேகம் இல்லை. இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. இதயத்திற்கும், உயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டிற்கும் இதன் பயன்கள் குறிப்பிடத்தக்கவை. உடனடி ஆற்றலை தரும் இதனை காலை உணவிலும், உடற்பயிற்சிக்கு முன்னும் உட்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.