சென்னை: வழுக்கை தலையை இந்த உலகில் யாரும் விருப்புவதில்லை. ஆனால் வேலைக்காக அதிகமாக வெளியில் சென்று வரும் ஆண்களின் தலையில் தூசி, அழுக்கு அதிகம் படிந்து கொள்ளும். இதனால் சில ஆண்களுக்கு முடி உதிர்வு, பொடுகு, வழுக்கை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை இயற்கை முறையில் சரி செய்ய முட்டை உதவுகிறது.
எனவே முட்டையை வைத்து தலைமுடியை பராமரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்: 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் மூன்று அல்லது நான்கு முட்டை வெள்ளை கரு ஆகியவற்றை நன்கு கலக்கி தலைமுடியில் உள்ள வேர்களில் படும்படி தேய்த்து ஒரு மணி குளியுங்கள். இப்படி செய்து வந்தால் பொடுகு மற்றும் முடி உதிரும் பிரச்சனைகள் விலகி போகும்.
முட்டை மற்றும் வாழைப்பழம்: நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று, ஒரு முட்டை, மூன்று ஸ்பூன் தேன் என அனைத்தையும் ஒரு பவுலில் எடுத்து அதை நன்கு பிசைந்து தலையில் தேய்த்து கொள்ளுங்கள். இப்படி செய்து ஒரு மணி நேரம் கழித்து முடியை நன்கு கழுவி ஷாம்பு தேய்த்து குளியுங்கள். இப்படி செய்யும் போது தலையில் உள்ள அழுக்குகள் விலகி முடி வளர உதவுகிறது.
முட்டை மற்றும் தயிர்: ஒரு முட்டை அதனுடன் ஐந்து ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலக்கி அதை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து தலையை நன்கு தேய்த்து குளியுங்கள் .
முட்டை மற்றும் விளக்கெண்ணெய்: 1 ஸ்பூன் விளக்கெண்ணெய், இரண்டு முட்டை ஆகியவற்றை நன்கு கலக்கி தலையில் தேய்த்து கொள்ளுங்கள். இப்படி செய்து அரை மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்து வர நல்ல மாற்றம் கிடைக்கும்.