இன்றைய வேகமான வாழ்க்கை முறைமையில் உடல்நலத்தை பராமரிப்பது அவசியமான ஒரு தேவை ஆகி விட்டது. குறிப்பாக கோடைக் காலங்களில் அதிகமான வெப்பம் காரணமாக உடலில் சோர்வு, ஜீரணக்கேடு, தோல் பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவது வழக்கமாகவே உள்ளது. இந்த நிலைமையில், இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்படும் பானங்களை உட்கொள்வது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
இவ்வகையில், கருவேப்பிலை, இஞ்சி மற்றும் நெல்லிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு ஹெல்தி டிரிங்க், வெப்பத்தில் சோர்ந்து போகும் உடலுக்கு புத்துணர்வை அளிக்கக்கூடியது. இந்த மூன்றும் உடலைத் தூய்மைப்படுத்தும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும் தன்மைகள் கொண்டவை.
கருவேப்பிலை ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது. இது இரத்தத்தை சுத்திகரிக்கிறது, பாக்டீரியாக்களை எதிர்த்து செயல்படுகிறது, மேலும் சருமம் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு நிவாரணமாக அமைகிறது. இஞ்சி ஒரு இயற்கையான அழற்சி எதிர்ப்பு மருந்தாக செயல்பட்டு, ஜீரண கோளாறுகள் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் C உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த மூன்றையும் சேர்த்து ஒரு பானமாக தயாரிக்கலாம். தேவையானவை: 10 கறுவேப்பிலை இலைகள், ஒரு சிறிய இஞ்சி துண்டு, சிறிய அளவு நெல்லிக்காய் துண்டுகள், தேன் அல்லது பனங்கற்கண்டு சுவைக்கேற்ப மற்றும் ஒரு கப் தண்ணீர். இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, வெறும் வயிற்றில் தினமும் காலை பருகலாம்.
இந்த பானம் கோடையில் ஏற்படும் உடல் சோர்வு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ஜீரண கோளாறுகளை குறைத்து, உடலை இயற்கையாக குளிர்ச்சியாக வைத்திருக்கும். மேலும், இது உடலை டாக்ஸின்களிலிருந்து சுத்தமாக்கி, சருமத்தை பளிச்சென்று தோன்றச் செய்கிறது. இந்த பானத்தை தினசரி குடிப்பதன் மூலம், நீண்ட நாட்களுக்கு உடல்நலத்தை பாதுகாக்க முடியும்.
சாதாரணமாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதாக தயாரிக்கக்கூடிய இந்த இயற்கை டிரிங்க், எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லாமல் உடலுக்கு நன்மை செய்யும் சக்தி பானமாக விளங்குகிறது. தினமும் ஒரு கிளாஸ் இந்த நெல்லிக்காய், கருவேப்பிலை, இஞ்சி ஜூஸ் குடித்து, உங்கள் உடலை கோடையில் குளிர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருங்கள்.