குழம்பு செய்யும் போது புளி ஒரு தவிர்க்க முடியாத பொருளாகும். அந்த அளவுக்கு சமையலில் புளி முக்கிய பங்கு வகிக்கிறது. குழம்பில் அதிகம் தேவைப்படும் புளி நம் உடலுக்கும் எவ்வளவு தேவை என்பது தெரியுமா? புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது.
இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக செரிமானத்தை தூண்டுவதிலும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் புளி முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே புளியில் மறைந்துள்ள மருத்துவ குணங்களை அறிந்து கொள்வது அவசியம்.
புளியில் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
புளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
புளியில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
புளியை உணவில் சேர்த்துக் கொண்டால் சருமம் பளபளக்கும்.
புளி சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
புளியை உணவில் சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் தொடர்பான கட்டிகள் உருவாகாமல் தடுக்கலாம்.
புளியில் நார்ச்சத்து அதிகம். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும், புளியை உணவில் சேர்க்கும்போது, அது பூஞ்சை காளான் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
புளி ஒரு டானிக் மற்றும் கிளீனிங் ஏஜென்டாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இது குடல் மற்றும் பிற செரிமான உறுப்புகளின் செயலிழப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது சுவையை கூட்டி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.