பாதாமின் தோல் கடினமானதாக இருக்கும் அதை ஊற வைத்து உரிக்கும் போதும் அதன் தோல் தடிமனாக இருக்கும். பாதாமை தோலுடன் அப்படியே சாப்பிடுவதால் செரிமானிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். பாதாமை இரவு முழுவதும் ஊற வைத்து அதிகாலை நேரங்களில் சாப்பிடுகின்றனர். இரவு முழுவதும் ஊற வைத்தால் மட்டுமே அதன் தோல் லேசாகி காலை நேரத்தில் தோலை எளிதில் நீக்க முடியும் என்பதற்காகத் தான் அவ்வாறு ஊற வைக்கப்படுகிறது.
பாதாம் தோலை நீக்காமல் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாமல், பக்க விளைவுகளாக வயிற்று உபாதையை உண்டாக்கலாம். அதுமட்டுமின்றி அதில் இருக்கும் ஆன்ட்டி நியூட்ரியன்ட்ஸ் டானிக் மற்றும் ஹைடிக் அமிலம் போன்றவை தோலில் இருப்பதால் அவை ஊட்டச்சத்து உறிஞ்சுவதைத் தடுக்கிறது. பாதாமை தோலுடன் சாப்பிடுவதால் ரத்தத்தில் பித்தம் அதிகரிக்கலாம். எனவே பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து அதன் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவது சிறந்த பலன்களைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். ஊற வைத்து தோல் உறித்த பாதாமை தினமும் ஐந்து முதல் பத்து பாதாம் வரை சாப்பிடலாம்.
இது உங்களது காலை வேளையை ஆற்றல் மிக்கதாகவும் சுறுசுறுப்பாகவும் உணரச் செய்யும். பாதாம் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஈ, ஒமேகா 3, ஒமேகா 6, மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சிங்க் போன்ற ஊட்டச்சத்துக்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. எனவே தினமும் குறைந்தது ஐந்து பாதம் சாப்பிட்ட வர ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். மூளை மற்றும் நரம்புகளுக்குப் பாதாம் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை ஏற்படுகிறது. பாதாம் ஞாபக சக்தியை அதிகரிக்கும், தசைகளுக்கு வலுசேர்க்கும்.
தினமும் காலை நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பாதாமை ஊற வைத்து சாப்பிடுவதன் மூலமாக உடலுக்குத் தேவையான புரோட்டின் அதிக அளவு கிடைக்கிறது. இதனால் அவர்கள் உடற்பயிற்சிக்குத் தேவையான சத்துக்கள் அதன் மூலமாகப் பெற முடியும். பாதாம் சற்று விலை அதிகமானதாகவே இருப்பினும் உடலுக்குத் தேவையான அதிக அளவில் சத்துக்களைக் கொண்டுள்ளதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாக விளங்குகிறது. பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள இந்த பாதாமை காலை நேரத்தில் உட்கொள்வது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடலில் ஓடும் ரத்தம் சீரான முறையில் இருக்க ரத்தத்தில் சரியான விதத்தில் அனைத்துச் சத்துக்களும் இருக்க வேண்டும். ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களைப் பெருக்கும் சக்தி பாதாம் பருப்புக்கு அதிகம் உண்டு.