இப்போது உலகளவில் பலர் சிறுநீரக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சிறுநீரகங்கள் மனித உடலின் முக்கியமான உறுப்புகளாக விளங்குகின்றன. அவை நமது உடலில் உள்ள நச்சுகளை சுத்திகரித்து, pH, உப்பு, பொட்டாசியம் மற்றும் பல முக்கிய துகள்களை சமநிலைப்படுத்தும் முக்கியப் பணிகளை செய்கின்றன. சிறுநீரகங்களில் சிறு பிரச்சனையும் இருந்தால், அதன் தாக்கம் உடலின் பிற பகுதிகளிலும் பரவக்கூடும்.

மரபணுக்கள், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் சிறுநீரகங்களின் செயலில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். இந்த பிரச்சனை இருந்தால், சிறுநீரகங்கள் இரத்தத்தை சரியாக வடிகட்ட முடியாது. அதுவும் ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், சிறுநீரக நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
சிறுநீரக பிரச்சனைகள் ஆரம்பத்தில் சில அறிகுறிகளுடன் ஆரம்பிக்கின்றன. இந்த அறிகுறிகள் குறிப்பாக காலையில் தென்படுகின்றன. அவற்றை கவனித்து, உடனே சிகிச்சை மேற்கொண்டால், ஆரம்பகட்டத்திலேயே பிரச்சனையை சரிசெய்ய முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சிறுநீரக நோய்களை தடுப்பதற்கான விழிப்புணர்வுகளை பரப்பும் நாளாக இருப்பதால், சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து ஆராய்வது முக்கியம்.
காலையில் முகத்தில் லேசான வீக்கம் இருந்தால், அது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, இது கணுக்கால் மற்றும் பாதங்களில் அதிகமாக காணப்படுமானால், அது தீவிர பிரச்சனையை சுட்டிக்காட்டும். இந்த வீக்கம், சிறுநீரகங்கள் நச்சுக்களை சரியாக வடிகட்ட முடியாமலாக உள்ளதால், உடலில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படுகிறது.
இரண்டாவது அறிகுறியாக, காலையில் சிறுநீர் கழிக்கும் போது, அதில் நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறினால், அது சிறுநீரக பிரச்சனையின் ஆரம்பகட்ட அறிகுறி ஆக இருக்கலாம். இந்த பிரச்சனை, சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாமல், சிறுநீரில் புரோட்டீன் அதிகரிக்கும் போது ஏற்படுகிறது.
மூன்றாவது அறிகுறி, சருமத்தில் வறட்சியும், அரிப்பும் ஆகும். சிறுநீரகங்கள் சேதமடைந்திருந்தால், நச்சுக்கள் உடலில் சிக்கி, வியர்வை சுரப்பிகள் சுருங்கி விடுகின்றன. இதனால் சருமத்தில் வறட்சியுடன், அரிப்பும் ஏற்படும். மாய்ஸ்ச்சுரைசர் பயன்படுத்தியும் இதன் நிலை திரும்பாது என்றால், அது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீரக பிரச்சனைகள் அதிகமானபோது, உடலில் திடீரென பல அறிகுறிகள் தென்படும். அவற்றை உணர்ந்து, முறையான சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.