சென்னை.: வெப்பமான நேரத்தில் நம் உடல் கொதிப்பாக இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் நம் உடலை குளிர்விக்க வேண்டும்,
உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. எலுமிச்சை உடலுக்கு வேண்டிய ஆற்றலை அளிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த இந்த பழம் மிகவும் எளிதில் கிடைக்க கூடியது. என்வே இது நம் உடலை புத்துணர்ச்சியுடனும், நீரேற்றமாகவும் இருக்க உதவுகிறது.
எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குடிப்பது உடலுக்கு அதிசயங்களை செய்யலாம். எனவே கோடை காலத்தில் தினமும் எலுமிச்சை தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை காண்போம்.
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்: ஒரு கிலாஸ் எலுமிச்சை நீர் குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும். இதில் இருக்கும் இயற்கையான ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட செய்கின்றன. மேலும் கோடைகாலத்தில் ஜலதோஷம் வருவதை தடுக்க முடியும்.
ஆரோக்கியமான முடி: கோடைக்காலத்திலும் தலைமுடியை சேதப்படுத்தும். எலுமிச்சை பானம் சுரப்பிகளில் இருந்து எண்ணெய் உற்பத்தி மற்றும் சுரப்பு குறைக்கிறது. மேலும் முடி உதிர்வதை தடுக்கும் மயிர்க்கால்களை இறுக்குகிறது.
ஹைட்ரேட் செய்ய உதவுகிறது: தினமும் எலுமிச்சை நீர் உங்கள் நீரேற்ற அளவை அதிகரிக்கும். உங்கள் பிஹெச் அளவை சமநிலைப்படுத்தும். எலுமிச்சையில் 90% அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. சூரிய ஒளியிலும் நீரேற்றமாக இருக்க எலுமிச்சை உதவும்.
எடை இழப்புக்கு உதவும்: எலுமிச்சை நீர் உடல் நச்சை நீக்கும் பானமும் கூட. இது கலோரிகளில் மிக குறைவு. தினசரி உணவில் சத்தான பானமாக இதையும் சேருங்கள். இது நார்ச்சத்து கொண்டது என்பதால் வயிற்றை திருப்திகரமாக வைத்திருக்கும். அத்துடன் உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் இது ஆரோக்கியமான எடை இழப்பு இதுவே சரியான முறையாகும்.