மாம்பழம் ஒரு இனிப்பும் சத்தும் நிறைந்த பழமாக கருதப்படும் நிலையில், அதன் இலைகளும் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது பலருக்குத் தெரியாத ஒரு உண்மை. இந்திய கலாச்சாரத்தில் மா இலைகள் மங்களகரமானவை என்றும், பெரும்பாலான சுப நிகழ்ச்சிகளில் வீட்டு நுழைவாயில்களில் தோரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதன் மருத்துவ நன்மைகள் தற்போது அதிகம் பேசப்படுகின்றன.

மா இலைகள் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் உள்ள மாங்கிஃபெரின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற இயற்கை சேர்மங்கள் உடலில் கலோரிகள் எரியும் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது நேரடியாக எடை குறைப்புக்கு உதவக்கூடிய ஒரு இயற்கை வழி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சிறப்புத் தன்மையும் மா இலைகளுக்கு உள்ளது. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இன்சுலின் எதிர்ப்பு தோன்றுவதைத் தடுத்து, பசியை கட்டுப்படுத்தும். இதுவும் எடையைக் குறைக்கச் செய்யும் ஒரு முக்கியமான வழியாகும்.
செரிமானத்தில் உதவியளிக்கும் இவை, மலச்சிக்கல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை குறைக்கும். செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்திருப்பதால், பசியும் சீராக இருக்கும். இது உணவின் போதிய உறிஞ்சலை உறுதிப்படுத்துவதால், உடலின் சோர்வும் குறையும்.
மா இலைகள் இயற்கையான நச்சு நீக்கியாகவும் பார்க்கப்படுகின்றன. கல்லீரலுக்கு சுத்திகரிப்பு வழங்கும் இவை, உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன. இதனால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட்டு, முழு உடலும் சுறுசுறுப்பாகிறது.
இந்த இலைகள் காலை காலியான வயிற்றில் நன்கு துலக்கியபின் மென்று சாப்பிடலாம், அல்லது சாறு வடித்து அருந்தலாம். எனினும், இது போன்ற இயற்கை சிகிச்சைகளை தொடங்கும் முன், உங்கள் உடல்நிலையைப் பொருத்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
மாம்பழ இலைகள் சத்துமிக்க ஒரு இயற்கை மருந்தாகவே கருதப்படலாம். இந்த இயற்கை வழிகளை தொடர்ந்து மேற்கொண்டால், எடை குறைதலும், உடல் ஆரோக்கியமும் நிச்சயம் சாத்தியமாகலாம். உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் இணைந்து செயல்பட்டால், இயற்கையான முறையில் நோயில்லா வாழ்க்கையை மேற்கொள்வது சாத்தியமாகும்.