சென்னை: மாம்பழத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு இது உதவும்.
மாம்பழத்தை வெயில் காலங்களில் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். ஃபோலேட், பீட்டா கெரட்டின், இரும்பு, வைட்டமின்கள் ஏ, வைட்டமின்கள் சி, கால்சியம், ஜிங்க் மற்றும் வைட்டமின் ஈ போன்ற முக்கிய மூலப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளது.
கோடை காலம் தொடங்கியதில் இருந்து அதை சமாளிக்க சில முக்கிய விஷயங்களை செய்து வருவோம். குறிப்பாக நமது உணவு பழக்கம் முதல் தினசரி நடவடிக்கைகள் வரை மாற்றி கொள்வோம். அந்த வகையில் வெயில் காலங்களில் பலரும் விரும்பி சாப்பிட கூடிய உணவு பொருட்களில் ஒன்று மாம்பழம். தர்பூசணி பழத்தை போன்றே பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.
மாம்பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் சீராக நடைபெறும். இதில் அமிலேஸ் எனப்படும் செரிமான நொதிகளை கொண்டுள்ளது. பெரிய உணவு மூலக்கூறுகள் செரிமான நொதிகளால் உடைக்கப்படுகின்றன, இதனால் அவை உங்கள் உடலால் எளிதில் ஜீரணிக்கப்படும். மேலும், மாம்பழத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு இது உதவும்.
ஒரு கப் மாம்பழத்தில் சுமார் 10% வைட்டமின் ஏ உள்ளது. மேலும் இதில் அதிக வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் உள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்திற்கு இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தாமிரம், ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள் மாம்பழத்தில் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவும்
மாம்பழங்களில் சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. இவை இரண்டும் சரும ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. மாம்பழங்களை சாப்பிடுவதால் முகத்தில் உள்ள அடைபட்ட துளைகள் நீங்கும். மேலும் இது தோலில் எண்ணெய் உற்பத்தியை குறைக்க உதவுகிறது. மாம்பழம் சாப்பிடுவதால் வயதான செயல்முறையை மெதுவாக்க செய்கிறது.