சென்னை: அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. இதை சரியான அளவில் நமக்கு கொடுக்கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற புளி. சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளி பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
புளிப்பு ஆகாரத்தை ருசிக்கச் செய்யவும் பொருளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. வைட்டமின் டீ மற்றும் யூ நிறைந்துள்ளது. புளி இலைகளை கொதிக்க வைத்த நீர், ஜுரம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் களைப்பு நீங்க குடிக்க பயன்படுகிறது.
ரத்தம் கலந்து மலம் கழிப்பவர்களுக்கு புளி கலந்து தேநீர் செய்து தருவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் அல்லது தொண்டை கரகரப்பு இருந்தால் புளி தண்ணீரில் வாய் கொப்பளித்தால் நல்ல தீர்வை தரும்.
ஸ்கர்வி என்று கூறப்படும் வைட்டமின் ‘யூ’ குறைபாடு இந்த புளி – பழக்கூழ் உண்பதால் தவிர்க்கப்படுகிறது. புளி இலைகளை தண்ணீரில் விட்டு அதன் ஆவி பிடித்தால் முடக்கு வாதத்திற்கு நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.
இதன் இலைகளை நறுக்கி நீரில் கொதிக்க வைத்து அதை பருகினால், காய்ச்சல் மற்றும் சூடாக சிறுநீர் கழிவது குறையும். நமது நாட்டில் இயற்கையாக வசந்த காலத்தில் கிடைக்கும் தண்ணீரில் பூளோரைடு அதிகம் இருக்கும். இதில் சிறிதளவு புளியை போட்டு வைத்தால் (இரவு முழு வதும்) அடுத்த நாள் குடிக்க உகந்ததாக மாறிவிடுகிறது.
இலைகளை கசக்கி சாறு எடுத்து குடித்தல் சீத கழிச்சலுக்கு நல்ல தீர்வு. புளியம் பழக்கொட்டைகளை பொடி செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகுதல் சீத கழிச்சலுக்கு தீர்வு. புளி இலைகளை கஷாயம் இட்டு பருகினால் மஞ்சள் காமாலை, குழந்தைகளுக்கு வயிற்று புழுக்கள், பூச்சிகள் நீங்கும்.