சென்னை: ஆரஞ்சு பழத்தில் அதிகளவு ஆரோக்கிய நன்மைகள்
நிறைந்துள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. இந்த பதிவில் ஆரஞ்சு ஜூஸ் தரும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்வோம்.
ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடிப்பதினால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும். ஆரஞ்சில் உள்ள அமில பண்பு இந்த கற்களை உடைக்கிறது.
ஆரஞ்சு ஜூஸில் அதிகளவு நார்சத்து உள்ளதால் இது கொழுப்பை கரைத்து உடல் எடையை விரைவில் குறைக்கிறது.
ஆரஞ்சில் இருக்கும் ஆன்டி அக்சிடெண்ட் விரைவில் முதுமை அடைவதை தள்ளி இளமையான சருமத்தை தருகிறது. மேலும் இது வயிற்றில் ஏற்படும் அல்சர் நோயை குணப்படுத்துகிறது.
ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்து சோடியம் அளவை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.
ஆரஞ்சு ஜூஸ் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பெருக்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.