அன்னாசிப்பழத்தில் உடலுக்குப் போதுமான அளவு வைட்டமின்கள் ஏ மற்றும் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் உள்ளன. உடல் ஊட்டச்சத்தின் பற்றாக்குறையைச் சமாளிக்க இது பயனுள்ளதாக இருக்கும். தினமும் சிறிதளவு அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள இந்த சத்துக்களின் குறைபாட்டை நீக்கலாம்.
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன. உடல் ஊட்டச்சத்தின் பற்றாக்குறையைச் சமாளிக்க இது பயனுள்ளதாக இருக்கும். தினமும் சிறிதளவு அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை நீக்கலாம். அன்னாசிப்பழத்தில் கால்சியம் மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளது.
நம் உடலில் உள்ள எலும்பு உருவாக்கத்தில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு இதிலுள்ள மாங்கனீசு எலும்புகளைப் பலப்படுத்துகிறது. தினசரி நம்முடைய டயட்டில் மிதமான அளவு அன்னாசிப்பழத்தைச் சேர்த்துக் கொண்டால், எலும்பு பிரச்சனைகள் தொடர்பான எந்த நோயையும் வராமல் தடுக்கலாம். அன்னாசிப்பழம் செரிமானத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைவான கொழுப்பு உள்ளது. அன்னாசிப்பழம் அல்லது அன்னாசி பழச்சாற்றுடன் ஆரோக்கியமான உணவைக் காலைச் சிற்றுண்டியில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்னாசிப்பழத்தில் உள்ள கால்சியம் பல் பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது. அன்னாசிப்பழம் ஈறு பிரச்சனைகளுக்குச் சிறந்த தீர்வாகும்.
தினமும் உங்கள் உணவில் மிதமான அளவு அன்னாசிப்பழத்தை உட்கொள்வதன் மூலம், பற்களில் பாக்டீரியாவின் தாக்குதல் குறைந்து, பற்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். கண் பார்வையைப் பராமரிக்க அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விழிப்புள்ளிச் சிதைவிலிருந்து இருந்து அன்னாசிப்ழம் பாதுகாப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.