நம் நாட்டில் அதிக மரணங்களுக்கு காரணமாக இருப்பது இதய நோய் தான். மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, வேலைச் சுமை மற்றும் மன அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகின்றன. இதனால் இதய தமனிகளில் அடைப்பு உருவாகி, இரத்த ஓட்டம் குறைந்து, ஹார்ட் அட்டாக் அபாயம் அதிகரிக்கிறது. ஆனால் வெறும் ரூ.15 செலவில் கிடைக்கும் ஒரு இயற்கை மூலிகை இந்த அபாயத்தை குறைக்க உதவும் என ஆயுர்வேதம் கூறுகிறது. அது தான் அர்ஜுனா பட்டை.

அர்ஜுனா பட்டை ஆயுர்வேதத்தில் இதயத்திற்கு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள டானின்கள், ஃபிளாவனாய்டுகள், கூமரின் போன்ற இயற்கை கூறுகள் இதய தசைகளை வலுப்படுத்துகின்றன. இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் இரத்த நாளங்கள் சுத்தமாகி, இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். மேலும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கொழுப்புச் சத்து குறையச் செய்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சந்தையில் மிக குறைந்த விலையில், ஆயுர்வேத கடைகளிலும் ஆன்லைனிலும் அர்ஜுனா பட்டை தூள் எளிதில் கிடைக்கிறது.
இந்த மூலிகையை கஷாயமாக சமைத்து குடிப்பது மிகவும் பயனுள்ளதாகும். அர்ஜுனா பட்டை பொடியை அல்லது சிறு துண்டுகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் இலவங்கப்பட்டை சேர்த்து அரை அளவு தண்ணீர் குறையும் வரை வைத்தால் கஷாயம் தயாராகிவிடும். குளிர்ந்த பிறகு சிறிது தேன் சேர்த்து காலை அல்லது இரவு குடிக்கலாம். இது இரத்த நாளங்களை சுத்தப்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. அதோடு மன அழுத்தத்தையும் குறைத்து மனநிலையை சமநிலைப்படுத்துகிறது.
இதன் ஊட்டச்சத்து மதிப்பும் சிறப்பானது. மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால் இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அர்ஜுனா பட்டையைத் தவிர, அஸ்வகந்தா, திரிபலா, பிராமி போன்ற பிற ஆயுர்வேத மூலிகைகளும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இருப்பினும், இவை அனைத்தையும் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.