By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரான்சில் போராட்டங்கள் குறித்து அதிபர் மேக்ரான் எச்சரிக்கை
    1 Min Read
    சூடானில் சந்தை மீது ட்ரோன் தாக்குதல்! 153 பேர் உயிரிழப்பு; அதிகரிக்கும் போர் பதற்றம்
    1 Min Read
    ரூ.30,213 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ இன்று தொடக்கம்! ஒரு பங்கின் விலை ரூ.1,119
    2 Min Read
    இந்தியாவின் வரலாற்றுப் பெருமைக்கு சர்வதேச அங்கீகாரம்! யுனெஸ்கோ பட்டியலில் சத்தீஸ்கரின் சிர்பூர்
    1 Min Read
    கனடாவை விட்டு பிரியும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரிவினை முயற்சிக்கு பின்னடைவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அரசியல் களத்தில் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து புதிய விவாதம்
    1 Min Read
    உலக விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தின் முத்திரை
    1 Min Read
    எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் 3,897 பதிவுகள் டார்க் வெப்பில் கசிவு! வங்கியின் தகவலால் அதிர்ச்சி
    1 Min Read
    சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் அழைப்பு!
    1 Min Read
    பிரதமரின் வெளிநாட்டுப் பயண விமான விவரங்களை வெளியிட முடியாது! டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பல்வேறு நோய்களை போக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன்
    1 Min Read
    சாதத்துடன் உடல் எடையை குறைக்க பயனுள்ள வழி
    1 Min Read
    இலை, பூ, காய், விதை, பட்டை என மருத்துவக்குணங்கள் நிறைந்த பூவரசு
    2 Min Read
    காலையில் முருங்கை இலை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    காதை சுத்தப்படுத்த இதை எல்லாம் செய்யாதீர்கள்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு விரைவில் சம்மன்?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு விரைவில் சம்மன்?
அரசியல் செய்திகள்

ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு விரைவில் சம்மன்?

Nagaraj
Last updated: September 8, 2026 10:22 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி அளவிலான ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, கே.என்.நேரு உள்பட 13 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 4-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கே.என்.நேருவின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 30 இடங்களில் கடந்த 5-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் 26 பக்கங்களில் பதிவு செய்துள்ள வழக்கு விவரத்தில், கே.என்.நேரு முதல் குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத், டி.வி.எச். கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த டி.ரமேஷ் மற்றும் டி.பிரபு உள்ளிட்டோரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோவை நகரமைப்பு முன்னாள் அலுவலர் ஆர்.சசிப்ரியா, திருப்பூர் மண்டல முன்னாள் பொறியாளர்கள் ஜி.பாலச்சந்திரன் மற்றும் ஜி.முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் ஜே.ஜே.எபினேசர் உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நீர் வழங்கல் துறைகளைச் சேர்ந்த அடையாளம் தெரியாத அதிகாரிகள், தனியார் நபர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

‘கட்சி நிதி’ என்ற பெயரில் டெண்டர் மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவி பிரசாத்தின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்கள், குறுந்தகவல் திரைப்பிடிப்புகள் மற்றும் டெண்டர் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

You Might Also Like

டெல்லி விமான நிலையத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு என்ன நடந்தது? ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

பிராந்திய வர்த்தக உறவுகளுக்கு முக்கியத்துவம்! தஜிகிஸ்தான் செல்கிறார் ராஜ்நாத் சிங்

முஸ்லிம்களாக மதம் மாறியவர்களின் இடஒதுக்கீடு விவகாரம்! உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு கோரிக்கை

தமிழக அரசியல் களத்தில் புதிய நகர்வு! தேர்தல் நடைமுறைகள் குறித்து கட்சிகள் தீவிர ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்: அக்டோபர் 28-ல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு

TAGGED:Corruption CaseKN NehruSummons ActionTender InvestigationTender IrregularityVigilance Policeகே.என்.நேருசம்மன் நடவடிக்கைடெண்டர் முறைகேடுடெண்டர் விசாரணைரூ.1020 கோடி ஊழல் புகார்லஞ்ச ஒழிப்பு போலீஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

இளையராஜா இசையில் உருவாகும் புதிய திரைப்படம்

By Nagaraj 0 Min Read

‘ராமாயணம்’ படத்தை திறந்த மனதுடன் பார்க்குங்கள்: யஷ்

By Nagaraj
சினிமா

மோகன்லால் படத்தில் இணையும் வெளிநாட்டு நடனக் குழு

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
ஆன்மீகம்

ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் கண் நோய்கள் குணமாகும்

சென்னை: கண் நோய் உள்ளவர்கள் கட்டாயமாக ஆவணி ஞாயிறு விரதத்தைக் கடைபிடித்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆவணி…

By Nagaraj
ஆன்மீகம்

வீண் விரைய செலவுகளை குறைக்க உதவும் பரிகாரம்

சென்னை: வீண் விரைய செலவுகளை குறைக்க செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தெரிவித்துக் கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள்…

By Nagaraj
ஆன்மீகம்

காலபைரவர் பற்றி சில சுவாரஸ்யமாக தகவல்கள் உங்களுக்காக!!!

சென்னை: சிவன் ஸ்தலங்களில் கால பைரவர் சன்னதி கண்டிப்பாக இருக்கும். இவருக்கென தனி சன்னதிகளும் உண்டு. நம்மை காத்து நிற்கும் கடவுளாக…

By Nagaraj
ஆன்மீகம்

தீபாவளிக்கு எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று தெரியுங்களா?

சென்னை: தீபாவளி நல்லெண்ணெய் குளியல்... தீபாவளிக்கு உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அந்த வகையில், இக்குளியலை சூரிய…

By Nagaraj
ஆன்மீகம்

ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் வெற்றிலை பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: அறுசுவை உணவுக்கு பின் உண்ணும் ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ள வெற்றிலை ஆன்மீகத்தில் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது.…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?