By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
    கனடாவில் கொட்டும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்! அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
    1 Min Read
    நேரலை செய்தி ஒளிபரப்பியபோதே ஹெலிகாப்டர் விபத்து: லாஸ் ஏஞ்சல்ஸில் 3 பேர் பலி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அக்டோபர் 1 முதல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்
    1 Min Read
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பீட்ரூட் சாப்பிடுவதல் என்ன நன்மைகள் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்..
    1 Min Read
    மருத்துவ குணங்கள் நிறைந்த மா விதையின் பயன்கள்
    1 Min Read
    எலுமிச்சை வேக வைத்த தண்ணீரால் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்
    1 Min Read
    நல்ல தூக்கத்தை அளிக்கும் மருதாணி பூக்கள்
    1 Min Read
    திராட்சை விதையின் ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
அரசியல் செய்திகள்

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

Nagaraj
Last updated: September 20, 2026 4:17 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) நிர்வாகத்திற்கு பதிலாக வேறு ஒரு ஆபரேட்டரை நியமிக்கக் கோரி தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை விமான நிலையம் சாதாரண வணிக நிறுவனம் அல்ல என்றும், அது மக்களின் பொதுச்சொத்து மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான பொது உள்கட்டமைப்பு என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்து, பயணிகள் சேவை, விமான இயக்கம், சரக்கு கையாளுதல், சாலை இணைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக நிர்வாகத்தை தனியார் வசம் ஒப்படைப்பது தீர்வாகாது என்று கட்சி தெரிவித்துள்ளது.

AAI நாடு முழுவதும் விமான நிலையங்களை நிர்வகித்து குறிப்பிடத்தக்க வருவாய் ஈட்டி வருவதாகவும், 2025-26 நிதியாண்டில் அதன் நிகர லாபம் ரூ.6,522 கோடியாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2024-25-ம் ஆண்டில் AAI நிர்வகிக்கும் விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டியவற்றில் சென்னை விமான நிலையமும் இடம்பெற்றதாகவும், அதன் லாபம் சுமார் ரூ.492.48 கோடி என தரவுகள் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் சரக்கு முனையம் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் சரக்கு இடமாற்றங்களை கையாள்வதாகவும், சரக்கு முனைய நெரிசலை குறைக்க 19.06 ஏக்கர் நிலத்தை ரூ.278 கோடியில் பெறும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி புதிய 5-வது முனையம் அமைத்து, ஆண்டுக்கு 5.5 கோடி பயணிகளை கையாளும் திறனை உருவாக்கும் திட்டம் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததுடன், தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தையும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தை AAI நிர்வாகத்தின் கீழேயே நவீனப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 

You Might Also Like

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்?

சேலத்தில் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

மழை இல்லாவிட்டாலும் டெங்கு அபாயம்: வீட்டில் தேங்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசு பெருக்கம்

புரட்டாசி முதல் சனி: தஞ்சை மீன் மார்க்கெட் வெறிச்சோடியது

எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

TAGGED:AAIAirport PrivatisationChennai airportCommunist Party of IndiaParandur AirportTamil Naduஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிஏஏஐசென்னை விமான நிலையம்தமிழ்நாடுபரந்தூர் விமான நிலையம்விமான நிலைய தனியார்மயம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
தமிழகம்

பீட்ரூட் சாப்பிடுவதல் என்ன நன்மைகள் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்..

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?