தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இரு தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
முதலில் தபால் வாக்குகளும், அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. மதுராந்தகத்தில் 27 வேட்பாளர்களும், தாராபுரத்தில் 22 வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர்.
மதுராந்தகத்தில் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் சுமார் 80.25 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அதிக வாக்குப்பதிவு காரணமாக வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
த.வெ.க. இந்த தேர்தலில் வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்களுக்கே வெற்றி என நம்பிக்கை தெரிவித்துள்ளன. இன்று வெளியாகும் முடிவு தமிழக அரசியல் எதிர்காலத்திலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
