முன்னாள் சிபிஐ இயக்குநர் எம்.நாகேஸ்வர ராவ் நேரடி அரசியலில் களமிறங்கியுள்ளார்.
வாராணசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சர்வஜன சனாதன் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். நவீன வளர்ச்சியையும் இந்தியாவின் பண்பாட்டு வேர்களையும் இணைக்கும் அரசியல் அணுகுமுறையை கட்சி முன்வைக்கும் என அவர் கூறியுள்ளார்.
சிபிஐயின் உயர்மட்ட பொறுப்பில் பணியாற்றிய ஒருவரின் அரசியல் பிரவேசம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
புதிய கட்சியின் அரசியல் செயல்பாடுகள் எந்தெந்த மாநிலங்களில் விரிவுபடுத்தப்படும், வரும் தேர்தல்களில் அக்கட்சி எவ்வாறு செயல்படும் என்பது அடுத்தகட்டத்தில் தெரியவரும்.
