புது டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று தனது 55-வது பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் அவருக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மூத்த கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், எம்.கே. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் தொண்டர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினர்.