சென்னை: கரூர் சம்பவத்தில் வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் குறித்து வதந்தி பரப்பியதாக 25 சமூக வலைதளக் கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, 3 பேர் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துக்குக் காரணமானவர்களை நேர்மையான விசாரணை மூலம் கண்டுபிடிக்கவும் கண்டுபிடிப்பதைவிட்டு, அவசரகதியில் வழக்குப் பதிவது எதனை மூடி மறைக்க, யாரைக் காப்பாற்ற என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னால் நிகழ்ந்த தவறை மறைக்க கேள்வி கேட்போரை கைது செய்வது பாசிசத்தின் உச்சம் எனவும், தமிழக அரசு சிபிஐ விசாரணை கோரவும் வலியுறுத்தி எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.