சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்திரா தோழமை சக்தி இயக்கத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்திரா காந்தி என்ற பெயரில் செயல்படும் இந்திரா தோஷமை சக்தி இயக்கம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பெண்கள் அரசியலிலும், கட்சியிலும் முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழக துணை முதல்வராக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர் துணை முதல்வராக சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துவோம்.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சிவராஜின் பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் சார்பில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெரும் நன்கொடை பெற்றது விரைவில் தெரிய வரும். தற்போது, தேர்தல் நன்கொடையை கட்டாயப்படுத்தி நிதியமைச்சர் சர் நிர்மலா சீதாராமன் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உண்மை வெளிவந்தே தீரும். வெறுப்பு அரசியலைப் பார்த்து மக்கள் சிரிப்பதில்லை. இந்தியாவில் அரசியல் பழிவாங்கும் போக்கை அனைத்து அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும்.
காமராஜர் காலத்தில் இருந்த நாகரீகம் இப்போது வர வேண்டும். வாரிசு அரசியல் பற்றி பாஜக பேசக்கூடாது. 60 பாஜக தலைவர்களின் வாரிசுகள் அரசியலில் பல்வேறு பதவிகளை வகிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடக் கூடாது. இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.