சென்னை : அதிமுகவை அழிக்க எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே போதும் என்று புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவை இபிஎஸ் விரைவில் அழித்து விடுவார் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளார். ஓநாயும், வெள்ளாடும் கூட சேர்ந்துவிடும், ஆனால் ஒருபோதும் இபிஎஸ் திருந்த மாட்டார் எனவும் விமர்சித்துள்ளார்.
கொடநாடு கொலை வழக்கில் இபிஎஸ்யை விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து அரசியல் அரங்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்த விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.