சென்னை: சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் வந்தனர்.
சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில், அதிமுக எம்எல்ஏக்களுடன் இ.பி.எஸ் ஆலோசனை நடத்தினார். கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப அதிமுக திட்டம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சட்டம்-ஒழுங்கு, கிட்னி திருட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேரவையில் அதிமுக கேள்வி எழுப்ப திட்டம் தீட்டியுள்ளதாம். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்