புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.
அதனைத் தொடர்நது அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணைக்கு நடத்தியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது. பணமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை செப்டம்பர் 9-ந் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதிலுக்கு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நான்கு வார காலஅவகாசம் கொடுத்துள்ளது நீதிபதி பிரதிபா எம்.சி. தலைமையிலான பெஞ்ச். அரவிந்த கெஜ்ரிவால் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றம் காலஅவகாசம் கொடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஜூன் 20-ந்தேதி விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால் ஜூன் 25-ந்தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமினுக்கு தடைவிதித்தது. ஜூன் 26-ந்தேதி சிபிஐ அவரை கைது செய்தது.