சென்னை : ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை அவமதித்துக் கொண்டே வருகிறது பாஜக என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
நேற்று தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டை அவமதித்தார்; இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டையும், முதல்வரையும் அவமதித்து பேசியுள்ளார் என்று கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை அவமதிக்கும் போக்கை பாஜக அமைச்சர்கள் பின்பற்றுகிறார்கள் என்றும் சாடியுள்ளார். தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்திருப்பதாக நிர்மலா கூறியதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்த்து வருவதால் மத்திய அமைச்சர்கள் இவ்வாறு பேசுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.