புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்து பாஜக தேர்தல் கமிட்டி ஆலோசனை நடத்தியுள்ளது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா, தேர்தல்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இத்தேர்தலில் கூட்டணி அமைக்கப்போவது இல்லை என்றும் தேர்தலில் போட்டியிடாத தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்கப்போவதாகவும் பாஜக அறிவித்துள்ளது.
40 அல்லது 50 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.