தமிழக வெற்றிக் கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயின்ட் என்ற தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிரமமின்றி நிகழ்ச்சிக்கு சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் மீது இளைஞர் ஒருவர் காலணி வீசினார். நீண்ட நேரமாக விஜய் வீட்டின் அருகே நின்றிருந்த அவர், தான் வைத்திருந்த ஷூவை கேட்டிற்குள் வீசிவிட்டு நடந்தார். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர்கள் உடனடியாக அவரை பிடித்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஷூவை எறிந்துவிட்டு அவர் விஜய் படங்களில் இருந்து பஞ்ச் வசனங்களை சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.