சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்ய தவறவிட்டதை தற்போது சாதித்து காட்டி உள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். என்ன விஷயம் தெரியுங்களா?
முதல்வரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாற்றவும், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கும் அதிகாரமளிக்கும் தீர்மானங்கள் ஜன. 5 1994-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டி மறுத்துவிட்டார். அதே தீர்மானங்களை 2022-ல் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின், சட்டப் போராட்டம் நடத்தி கோர்ட் மூலம் அந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
இதைத்தான் அரசியல் விமர்சிகர்கள் ஜெயலலிதா செய்யத் தவறியதை சட்டப் போராட்டம் நடத்தி கோர்ட் மூலம் அதிரடி உத்தரவை பெற்று மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவிக்கின்றனர்.