சென்னை: தனது பிறந்த நாளையொட்டி திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவுரை வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் ஒன்றாம் தேதி தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், திமுகவினருக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான பிரசாரப் பணிகளை அமைதியாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.
ஆர்வம் மிகுதியால், கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களைத் தவிர்த்து, அனுமதிக்கப்ட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்தவும், உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.