புதுடில்லி: குடியரசு தலைவர் உரையை விட மக்கள் முக்கியம் என்று மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், “குடியரசு தலைவர் உரையை விட மக்கள் முக்கியம்” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
மேலும் அவர், “கும்பமேளாவில் காணாமல் போன பலரின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. கும்பமேளாவில் காணாமல் போனவர்களின் விவரத்தை அளிக்க வேண்டியதும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமை” என்றார்.