அமெரிக்கா: எகிறுது எதிர்பார்ப்பு… வரும் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் வெற்றி கமலா ஹாரிசுக்காக,- டிரம்ப்பிற்காக என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், தேர்ந்தெடுக்கப்படும் புதிய அமெரிக்க அதிபர் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்பார் என கூறப்படுகிறது.
ஜோ பைடனுக்கு பிறகு அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்காவின் புதிய அதிபர் வெள்ளை மாளிகையில் இருந்து பணியாற்றுவார்.