மதுரை: மார்ச் 1ல் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மார்ச் 1ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிப்ரவரி 28ம் தேதியன்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர், அன்று இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், மார்ச் 1ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பிறகு மதியம் 2 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் வரும் பிரதமர், அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு சென்றடைந்து அங்கிருந்து பொதுக்கூட்டத்திற்கு செல்ல உள்ளார். மாலை 4 மணியளவில் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லும் அவர், மாலை 6 மணியளவில் விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.