பிரஸ்சல்ஸ்: கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய யூனியன்… ரஷ்ய அதிபர் புடினின் அணு ஆயுத மிரட்டலுக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.
போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மீது நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளன. இத்தகைய தாக்குதல், தங்கள் மீது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நேரடி தாக்குதல் என்றும், தங்கள் நாட்டை பாதுகாக்க அணு ஆயுதம் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்று பொருள்படும் வகையில், ரஷ்ய அதிபர் புடின் கூறியிருந்தார்.
இதற்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு கொள்கை விவகாரங்கள் துறையின் செய்தி தொடர்பாளர் பீட்டர் ஸ்டனோ கூறுகையில், ”புடின். இவ்வாறு அச்சுறுத்துவது ஒன்றும் புதிதல்ல. அதன் காரணமாகவே, ஐரோப்பிய யூனியன் இதை முற்றிலும் நிராகரிக்கிறது. வன்மையாக கண்டிக்கிறது,” என்றார்.
ஐ.நா.,வுக்கான ஐரோப்பிய யூனியன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”புடினின் இத்தகைய செயல்பாடுகளும், அச்சுறுத்தலும் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை,” என்றார்.