சென்னை : அண்ணாமலை இடத்தை நிரப்புவாரா பாஜகவின் மாநில புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதில் சற்று கால தாமதம் ஆனது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். 3 முறை எம்எல்ஏ, ஒருமுறை அமைச்சராக இருந்துள்ளார். அதேநேரத்தில் அண்ணாமலை தலைவராக இருந்தபோது தான் அக்கட்சிக்கு இளம் தலைமுறையினர் இடையே பெரும் வரவேற்பு அதிகரித்தது.
அண்ணாமலை பேச்சை கேட்கவே தனிக்கூட்டம் வருவதுண்டு. அவரின் இடத்தை நயினார் நிரப்புவாரா? அவரை விஞ்சுவாரா? அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. நயினார் நாகேந்திரன் தலைவரான உடனேயே பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்துள்ளதும் அரசியல் களத்தில் ஆச்சரிய பார்வையை ஏற்படுத்தி உள்ளது.